Latest News
சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் பெண் காவலர் கவிதா. சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அருகில் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்ததில் காவலர் கவிதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்து காவலர் முருகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கனமழை காரணமாக தலைமைச் செயலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உயிரிழப்பு https://t.co/1CaJ6HtCnf pic.twitter.com/TziotJu1U1
— Dinakaran (@DinakaranNews) November 2, 2021