cinema news
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
இந்த சம்பவம் கடந்த 18ம் தேதி வெளியாகி இருந்தாலும் தற்போதுதான் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காரை அவரது டிரைவர் ஓட்டி செல்லும்போது தேனாம்பேட்டை சிக்னல் அருகே சாலையை கடந்து சென்ற ஒரு முதியவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சிம்புவின் கார் டிரைவர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அந்த காரில் சிம்பு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார் மோதி பலியான முதியவர் அந்த பகுதியில் உள்ள காவலர் பணி செய்து கொண்டிருப்பதாகவும் அவரது பெயர் முனுசாமி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன