தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள் மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையை முன்னிட்டு இந்த திருவிழா நடப்பது வழக்கம்.
நேற்று நடந்த தேர்த்திருவிழாவில் உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தமிழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த விபத்தை கேள்விப்பட்ட இந்திய பிரதமர் மோடி இந்த விபத்துக்கு கடும் வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.