Connect with us

வேலூரில் வாந்தி பேதி இருவர் பலி

Latest News

வேலூரில் வாந்தி பேதி இருவர் பலி

வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ள நிலையில் 4வயது சிறுவன் மற்றும் 61 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அல்லிவரம் கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளத்தில் கழிவுநீர்  கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும் அதனை குடிப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினர் அவர்கள் குடிக்கும் நீரை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் அம்மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கியதோடு அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர்களை போட்டனர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அல்லிவரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் ஆர்டிஓ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பாருங்க:  பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மருத்துவமனையில் அனுமதி

More in Latest News

To Top