Tamil Flash News
ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் – எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனு!
ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார். அந்த பணத்தை பெறுவதற்கான விண்ணப்பங்களும் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பஞ்சாயத்து சார்பில் செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. எனவே, தமிழக அரசின் திட்டம் நிறைவேறுமா என்பதை நாளை தெரிய வரும்.