என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி – ரஜினிகாந்த் டிவிட்

247
Rajinikanth thanks to all wishing her daughter

தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.   அதற்கு முன்பே 2 நாட்கள் நிச்சயதார்த்தம், திருமண சடங்குகள் நடந்தது. அதேபோல், திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது.

தொழிலதிபர் விஷாகனை அவர் திருமணம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு என அனைத்து நிகழ்வுகளிலும் ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் “வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என டிவிட் செய்துள்ளார்.

பாருங்க:  மீண்டும் பிரதமர் ஆகிறாரா மோடி? கருத்துக்கணிப்பில் தகவல்