- Homepage
- Latest News
- கூண்டோடு வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள்…உண்ணாவிரதம் அறிவித்த அதிமுக?…
கூண்டோடு வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள்…உண்ணாவிரதம் அறிவித்த அதிமுக?…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தின் கடும் தீவிரம் காட்டி வருகிறது தமிழக எதிர்கட்சியான அதிமுக. தொடர்ந்து நான்காவது நாளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தே பேரவைக்கு வந்தனர்.
மாநிலம் முழுவதும் அதிமுக சார்பாக கள்ளச்சாராய உயிர் பலி விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.அதே போல கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
இதனால் தொடர்ந்து பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தும் , அதே போல அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டதாக வெளியேற்றப்பட்டும் வரப்பட்டனர்.
இன்று பேரவை கூட்டத்தொடர் ஆரம்பித்தது கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.அவையின் நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படுவதாக சொல்லி திமுக அவைத்தலைவர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் எதிர் கட்சி எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து, அவர்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாளை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு காவல் துறையின் அனுமதி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அதிமுகவினர்.