Published
10 months agoon
1960 மற்றும் 70களில் ரஜினி, கமல் படங்கள்தான் அதிக அளவில் வரும். முக்கியமாக ரஜினி, கமலை வைத்து அதிக படங்களை இயக்கியது அவர்களின் குருநாதர்தான்.
பெரும்பாலான 70ஸ் படங்களில் ரஜினி, கமல் சேர்ந்து தான் நடித்திருப்பார். 70ஸ் காலங்களில் தொடர்ந்து அன்லிமிட்டெட் ஆக சேர்ந்து நடித்த ரஜினியும், கமலும் ஒரு கட்டத்தில் இணைந்து நடிக்கவே இல்லை.
இவர்கள் இருவரும் இணைந்து சேர்ந்து நடித்து 40 வருடங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில் நேரம் , பிரேமம் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்றவர் அல்போன்ஸ் புத்ரன், இவர் தற்போது, ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதற்கான கதை தன்னிடம் உள்ளதாக அந்த கதை இருவருக்கும் பிடிக்கும் எனவும் தனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இருவரையும் ஒருமுறை கூட சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அல்போன்ஸ்புத்ரன் கூறியுள்ளார்.