indian
indian

இதெல்லாம் இருக்குமா இந்தியன் – 2வில்?…ஏக்கத்தோடு காத்திருக்கும் கண்கள்!…

 

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் முக்கிய புள்ளிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

“இந்தியன்”  முதல் பாகம் பெற்ற வெற்றியை போலவே இரண்டாம் பாகத்தின் வெற்றியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தை ஏற்று நடித்திருப்பார் கமல்.

நாட்டை சீரழிக்கும் லஞ்சத்தை ஒழிக்கவும் ஊழல் அடியோடு ஒழியவும் கரைபடிந்த கரங்களை கொண்ட அலுவலர்களை தேடிச்சென்று கொலை செய்து விடுவார் தந்தை கமல்ஹாசன். ஊழலுக்கு எதிரான தனது கொள்கைக்காக எதையும் செய்யபவராகவே நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் தனது மகன் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்த தவறால் நடந்த சோகமான விபத்து ஏற்படக்காரணமாக இருந்திருப்பார். இதனால் தனது மகன் என்றும் பாராமல் தனது மகனை கொலை செய்து விடுவார். அதற்கு அவர் பேசிய வசனம் தான் மிக உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

indian-2
indian-2

தன் மீசை குத்தினால் தனது மகனுக்கு வலிக்கும் என்பதால் மீசை இழந்தேன். ஆனால் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் செய்கைகளை செய்ததால் என் மகனை இழக்க நான் தயாராகி விட்டேன் என வரும் அந்த வசனம்.

சொன்னது போல தனது மகன் கமல்ஹாசனை கொன்ற பின்னர் வரும் இறுதி காட்சியில் இந்தியனுக்கு சாவே கிடையாது என சொல்ல படத்தின் முதல் பாகம் முடிவடையும்.

அந்த காட்சியில் கமலுக்கு முகத்தில் மீசை இருக்கும். இப்படி உணர்ச்சி பொங்க வைக்கும் வசனங்கள் இந்தியன்-2 வில் இருக்குமா? என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருக்கலாம்.