கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பித்த கொரோனா பாதிப்புகள் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. தினமும் கொரோனா பாதிப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என ஆரம்பத்தில் சரியாக செய்து வந்த மக்கள் தற்போது அதை பின்பற்றுவதில்லை.
இந்நிலையில் இன்று பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று முதல் சுகாதாரத்துறை மிக தீவிரமாக செயல்படும் மாஸ்க் அணியாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வீட்டில் தகரம் பொருத்தி தனிமைப்படுத்தி கொள்ளும் எந்த உத்தரவும் தாங்கள் இடவில்லை, பொதுமக்கள் அரசு மருத்துவமனகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.