Corona (Covid-19)
கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு
மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த நிலையில்கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. விதிவிலக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி ஊரடங்கை திரும்பப் பெற அரசு நேற்று முடிவு செய்திருந்தது. ஆனால் மறு ஆய்வுக் கூட்டத்தில் வார இறுதி முழு ஊரடங்கு திரும்பப் பெற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு வாரம் வரை இருக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையின் போது, அனைத்து கடைகளையும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.