கடும் ஆபத்தில் இருந்த கொரோனா நோயாளியை காப்பாற்றி அவரது பிறந்த நாளை கொண்டாடிய மருத்துவமனை

கடும் ஆபத்தில் இருந்த கொரோனா நோயாளியை காப்பாற்றி அவரது பிறந்த நாளை கொண்டாடிய மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அபாயக்கட்டத்தில் இருந்து காப்பாற்றி அவரது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ வைத்திருக்கிறது சென்னை மருத்துவமனை ஒன்று.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் இவருக்கு வயது 80 கடும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை அபாயக்கட்டத்தை எட்டியது. திண்டுக்கல்லில் பார்க்க இயலாமல் மேல்சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இவர்.

அங்கு வென்டிலேட்டர் மற்றும் உயிர்காக்கும் மருந்து வாயிலாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக, ஒரு வாரத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, அவரது, 80வது பிறந்த நாளை நேற்று மருத்துவமனையில் மருத்துவர்கள் கொண்டாடினர். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அப்போது, கிருஷ்ணன் என்பவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து, நோயாளிகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினோம். இதுபோன்ற நிகழ்வு, மற்ற நோயாளிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.