Corona (Covid-19)
கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு 5000 உதவி- கேரள முதல்வர்
மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் அதிகம் கொரோனா தொற்று பரவியது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக குறைந்தபோதிலும் கேரளாவில் மட்டும் ஏதோ கேரளா இந்தியாவை விட்டு தனித்து இருப்பதுபோல் கொரோனா குறையாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா குறைந்திருக்கிறது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அறிவிப்பில் கூறி இருப்பதாவது, கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பங்களில் இறந்தவர் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தந்த நபராக இருந்தால் அவரது குடும்பத்துக்கு மாதம் 5000 ரூபாய் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வரவேற்பு பெற்றுள்ளது.