Corona (Covid-19)
கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் அதிகம் இருந்தது.
தற்போது பல மாவட்டங்களில் கொரோனா குறைந்து இருந்தாலும், பக்கத்து மாநிலமாக கேரளா கோவைக்கு மிக அருகில் இருப்பதால் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் கடுமையான தொற்று கோவைக்கும் லேசாக பரவி அதிகரிக்கிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் பேக்கரிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.
மளிகை , பால்கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.