Entertainment
கமல் சிவாஜி நடித்த இந்த படத்துக்கு இத்தனை வயதா
கமல், சிவாஜி நடிப்பில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன. கமலும் சிவாஜியும் இணைந்து விட்டாலே அந்த படத்தை எதிர்பார்க்க துவங்கி விடுவார்கள் ஏனென்றால் இருவரும் நடிப்பு ராட்சதர்கள் என்பதால் இவர்கள் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
இவர்களின் தேவர் மகன் படத்தை சொல்லவா வேண்டும்.
தேவர் மகனுக்கு முன்பே 1977ம் ஆண்டு அக்டோபர் 7 தேதி வெளியான நாம் பிறந்த மண் படத்தில் இவர்கள் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
இந்தியன் டைப் கதை அம்சம் கொண்ட படமாக இது வந்தது.
இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது
இந்த படம் வெளியாகி இன்றுடன் 44 வருடங்களை நிறைவு செய்கிறது.
இந்து ரங்கராஜன் தயாரிப்பில் வியட்நாம் வீடு சுந்தரம் & வின்சென்ட் இயக்க எம்எஸ்வி இசை. பிற்காலத்தில் ஷங்கர் இதை இந்தியனாக்கினார். ஜெமினி, கேஆர் விஜயா படாபட் போன்றவர்களும் நடித்திருந்தனர்.
