cinema news
ஒரு நாளைக்கு இத்தனை பேரா?…எப்படி சமாளிக்கிறது!…ஆதங்கப்பட்ட ரஜினியின் ரீல் மாமியார்?…
தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்தவர் உமா பத்மநாபன். தொலைக்காட்சியின் மூலம் கிடைத்த புகழ் அவரை அப்படியே வெள்ளித்திரைக்கு கூட்டிச்சென்றது. எடுத்த எடுப்பிலேயே ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ரஜினி, ஸ்ரேயா நடித்த “சிவாஜி” படத்தில் உமா நடித்திருந்தார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் மனைவியாக நடித்திருந்தார். இதை விட படத்தில் ரஜினியின் காதல் மனைவியான ஸ்ரேயாவின் அம்மாவாக நடித்திருந்தார் என்ற சொன்னால் ஈஸியாக புரிந்துவிடும்.
ரஜினி, விவேக் ஸ்ரேயாவிற்காக அடிக்கும் லூட்டியில் இவரது பங்கும் படத்தில் அதிகமாகவே இருந்தது. பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா படத்தில் கொஞ்ச நேரம் வந்திருந்தாலும் கலக்கி இருப்பார்.
சிவாஜியில் ரஜினிக்கு மாமியாராக நடித்த உமா தற்போது ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் யூ-டியூப் சேனல்களை பற்றி பேசியுள்ளார்.
நண்பர்கள், தெரிந்தவர்கள், பொது நிகழ்ச்சிகளில் அறிமுகமாகிய நபர்கள் துவங்கும் புதிய யூ-டியூப் சேனல்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக சப்ஸ்க்ரைப் செய்கிறன். ஆனால் மொபைல் போனை திறந்ததுமே புதிது, புதிதாக நோட்டிஃபிகேசன் வந்து குவிகிறதாம்.
அதிலும் சில பதிவுகள் இப்போது தான் பதியவேற்றம் செய்யப்பட்டது, சுடச்சுட என வருவதை எல்லாம் பார்க்கும் போது வேறு வழி இல்லாமல் சகித்துக்கொண்டு இது தான் இனி நம்ம வாழ்க்கை. அதனால் இதை எல்லாம் பொருத்தும், கடந்து தான் செல்ல வேண்டும் என சலிப்பு தட்டும் விதமாக பேசியிருக்கிறார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன் சார்ந்தவர்களின் வளர்ச்சியிலும், நலனிலும் அக்கறை காட்டி அவர்களுக்காக நேரம் செலவழிக்க நினைக்கும் உமாவின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள் குவியத்தானே செய்யும். இருக்காத பின்னே, நாடு நல்லா இருக்க வேண்டும் என நினைத்த சிவாஜிக்கு தனது மகளை மணமுடித்து கொடுத்து, திரையில் மாமியாராக வந்தவராச்சே.