Entertainment
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
சினிமா நடிகர்கள் மீது வெறிகொண்ட ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்தக்கால எம்.ஜி.ஆர், சிவாஜியில் இருந்து, பின்பு வந்த ரஜினி,கமல் வரை உள்ள நடிகர்களை பார்த்து அச்சு அசலாக அவரைபோல மாற்றிக்கொண்ட பல வெறித்தனமான ரசிகர்கள் பலரை பார்த்திருப்போம்.
இந்த ரசிகரும் அப்படித்தான் கமலின் நிழலாகவே மாறி விட்டார். கமலை போல இருக்க வேண்டும் என நினைத்து அச்சு அசல் கமலாகவே மாறிவிட்டார் இவர்.
இவரை கமல்ஹாசன் சந்தித்தபோது இவருக்கு பேச்சே வரவில்லை. மிமிக்ரி எதுவும் செய்யாமல் கமலாகவே மாறிப்போனார் இவர். இவரை கமல் சந்தித்தபோது நான் மிமிக்ரி எல்லாம் செய்யல சார் என பணிவுடன் பேசியுள்ளார் இவர்.
ஆண்டவரும் ஆண்டவரின் நிழலும் உரையாடினால் இப்படி தான் இருக்கும் #vikram #KamalHaasan pic.twitter.com/OFQPCsUWEw
— மய்யவாதி (@KirubakaranMCA) June 1, 2022
