Latest News
மன அழுத்தத்தில் இருக்கிறேன் – டிஜிபிக்கு பெண் டி.எஸ்.பி எழுதிய கடிதம்
பொதுவாக காவல்துறையில் வேலை பார்க்கும் பலர் பெரும் மனச்சுமையுடனே உள்ளனர். அவர்களது துறை மிகவும் கடுமையான துறை, அதிக நேரம் அவர்களுக்கு ஓய்வு கிடைக்காது பல வழக்குகளை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பணிச்சுமை அதிகரிக்கிறது.
இதனால் ஒரு சில காவலர்கள், அதிகாரிகள் மேலதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியால் தற்கொலை கூட செய்துகொள்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மாநில டிஜிபிக்கு ஒரு பெண் டி.எஸ்.பி அளித்துள்ள கடிதம்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு என்ற பகுதியில் டி.எஸ்.பியாக பணியாற்றி வரும் சந்தியா என்பவரே இந்த கடிதத்தை டி.எஸ்பிக்கு எழுதியுள்ளார்.
தனது பயிற்சியை முடித்து கடந்த ஆண்டு செப்.8-ம்தேதிதான், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக இவர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களாக சென்னையில் பயிற்சியில் உள்ளார்.
இவர் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது,சட்டம் ஒழுங்குப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்சினையும்இருக்கிறது. பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனநிலை இருக்கிறது.
எனது கணவர், பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாருடன் நல்லபடியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறேன். இருந்தும் பணிச்சுமை காரணமாக எனக்கு மன உளைச்சல் அதிகம் உள்ளது
எனவே, எனக்கு காவலர் பயிற்சி மையம் (பிஆர்எஸ்) அல்லது பட்டாலியன் போன்ற சென்சிட்டிவ் அல்லாத பிரிவில் பணியிடமாற்றல் வழங்கி என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து சந்தியா.
