cinema news
விக்ரம் படம் எப்படி உள்ளது?
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் ரிலீஸ்ஆகி இருக்கிறது என பார்ப்போம். படம் கடந்த 1986ம் ஆண்டில் வெளிவந்த விக்ரம் படத்தின் தொடர்ச்சியா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அது ராக்கெட் கதை இது போதைப்பொருள் கும்பலின் கதை. சீரும் சிறப்புமாக பாசமாக கமல் தன் மகனை வளர்த்து வருகிறார். அவரை போதைப்பொருள் கும்பல் கொன்று விடுகிறது.
அந்த போதைப்பொருள் கும்பலை கமல் பலிவாங்குவதுதான் கதை.படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மிக சிறப்பாகவே இந்த படம் வந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் முந்தைய படத்தின் ஒன்லைனான போதைப்பொருள் சம்பந்தமான விசயத்தையே இதிலும் எடுத்திருக்கிறார்.
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி இதில் வில்லன் சந்தனமாக நடித்துள்ளார், அவருக்கு மூன்று மனைவிகள் என கதை அமைக்கப்பட்டுள்ளது பகத் பாஸில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
நரேன் கமல் பழிவாங்குவதற்கு உதவியாக வருகிறார்.படத்தின் திரைக்கதையால் படம் நன்றாகவே இருக்கிறது என பரவலாகவே சொல்லப்பட்டு வருகிறது.