cinema news
கமலுடன் சேர்ந்து கேஜிஎஃப் படம் பார்த்த இளையராஜா
இசைஞானி இளையராஜா சமீபத்தில்தான் ஒரு பேட்டியில் நான் இசையமைக்கும் படங்களை தவிர வேறு படங்களை பார்ப்பதில்லை பார்ப்பதற்கு நேரம் இருப்பதில்லை என கூறி இருந்தார்.
இந்த நிலையில் கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சக்கை போடு போடுகிறது. இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகளிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகி தியேட்டர்கள் காலியாக கிடக்கும் நிலையில் கேஜிஎஃப் 2 பயங்கர வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அழைப்பை ஏற்று இசைஞானி இளையராஜா நேற்று சென்னையில் கேஜிஎஃப் 2 படத்தை இருவரும் இணைந்து பார்த்துள்ளனர்.
#CELEBRITYCLICKS | நடிகர் கமல் ஹாசனுடன் சேர்ந்து கேஜிஎஃப் 2 படம் பார்த்த இசைஞானி இளையராஜா! #SunNews | #KamalHassan | #Ilaiyaraaja | #KGF2 | #KGFChapter2 | @ikamalhaasan | @ilaiyaraaja pic.twitter.com/tlnvFRa8gt
— Sun News (@sunnewstamil) April 28, 2022