Latest News
நடராஜரை இழிவுபடுத்திய பிரபல யூ டியூபர்ஸ்
கருத்து சுதந்திரம் என்பதை சிலர் அளவுக்கதிகமாக தவறாகவே பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டனர்.
பின்னர் ஒருவழியாக அந்த சேனலில் பேசிய சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் யூ டூ ப்ரூட்டஸ் என்ற யூ டியூப் சேனலில் சிதம்பரம் நடராஜரை அவதூறாக பேசி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மத கடவுள்களை மட்டும் இழிவுபடுத்துவது ஏன் என தெரியவில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் உளறும் சிலரின் தவறான கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும் அது போல யூ டியூப் சேனல்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
முதல்வர் கவனத்துக்கும், இது போல சேனல்களின் அட்டூழியங்கள் செல்கிறதா என தெரியவில்லை.