Published
11 months agoon
இளையராஜா ஒரு புத்தக முன்னுரையில் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு உவமை எழுதியுள்ளார். இந்த விசயத்தை கேட்ட பல திராவிட அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல கட்சிகள் இந்த விசயத்தி ல் இளையராஜாவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இளையராஜா அப்படி பேசியது தவறு என சொல்லி வருகிறார்கள்.
இருப்பினும் இளையராஜா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக என் பேச்சை நான் வாபஸ் வாங்கமாட்டேன் என கூறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கங்கை அமரன் இந்த விவகாரத்தில் ஸ்டாலின், திருமாவளவன் குறித்தும் விமர்சித்தார்.
இந்த நிலையில் இளையராஜா, கங்கை அமரன் இசை சகோதரர்களை சங் பரிவார் கும்பல் இயக்கி வருகிறது. அவர்களை சங் பரிவார் கும்பல் இயக்குவதாக தான் நான் கருதுகிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார். இது அம்பேத்கரை விழுங்கும் முயற்சி எனவும் திருமா கூறியுள்ளார்.