Published
11 months agoon
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது.
இந்த பாதை கோவிலுக்கு நடந்து செல்லும் பாதையாகும்.அலிபிரி மலைப்பாதை என்ற பாதையும் திருப்பதியில் உள்ளது அலிபிரியை விட இப்பாதையில் நடந்து செல்வது சிறப்பு. மிக விரைவாக கோவிலை அடையும் பாதை இது.
மன்னர்கள் காலத்திலும் இந்த பாதை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. திருப்பதி கோவில் வரலாறுகளோடு இம்மலைப்பாதை அதிக சம்பந்தம் உள்ளது
கடந்தாண்டு கடுமையான வெள்ளத்தால் திருப்பதியில் உள்ள இந்த மலைப்பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் 3.60 கோடி செலவில் மராமத்து பணிகள் பாதிக்கப்பட்டு பாதை சீராகியுள்ளது. புதிய அடிப்படை வசதிகள் இப்பாதையில் செய்யப்பட்டுள்ளன.
சீர் செய்த தேவஸ்தான பொறியியல் துறையினரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி வெகுவாக பாராட்டினார். மேலும், நேற்று காலையில் இப்பாதையை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் வழியாக திரளான பக்தர்கள் திருமலைக்கு நடந்து சென்றனர்.
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ராஜபக்ஷே வருகை
திருப்பதியில் டோக்கன் பெற குவியும் மக்கள்
திருப்பதியில் முத்தம்- ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்
திருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு