Latest News
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபத்தான இயக்கம்- ஆளுநர் ரவி
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் முக்கியமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சர்ச்சைகளையும் இதுவரை சந்தித்துள்ளது இது ஒரு ஆபத்தான இயக்கம் என அவ்வப்போது கருத்துக்கள் இருந்தாலும் முதன் முறையாக தமிழக கவர்னர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஆர். என் ரவி பேசியதாவது.
மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அணிந்து இயங்கி வருகிறது என ஆளுநர் பேசியுள்ளார்.