Tamil Cinema News
மிரட்டி பணம் பறிக்க நாடகம்- ஆர்யன்கான் கைது குறித்து அமைச்சர்
மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன்கானுக்கு போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஆர்யனின் போலீஸ் காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்யன் கானுக்கு போலீஸ் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்யனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரஇருக்கிறது. இந்நிலையில், ஆர்யனின் கைதுக்கும், பாஜக-விற்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் தெரிவித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார் மராட்டிய மாநில அமைச்சர் நவாப் மாலில். இவர் கூறி இருப்பதாவது மிரட்டி பணம் பறிப்பதற்காகவே ஆர்யன் கைதை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அரங்கேற்றியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா அரசிற்கு தலைகுனிவு ஏற்படுத்த நிகழ்த்தப்பட்ட இந்த சோதனை நாடகமானது, போலியென்றும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் பணம் பறிக்கும் செயலே என்றும் விரைவில் உண்மை அம்பலத்துக்கு வரும் என்றும் மராட்டிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
