போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக் மகன் விடுவிப்பு

போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக் மகன் விடுவிப்பு

தமிழில் உயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாருக்கான். இவர் ஹிந்தியில் மிகப்பெரும் ஹீரோ என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த நிலையில் தமிழில் அட்லி இயக்கும் படத்திலும் நடித்து வந்தார். இந்த படம் பேன் இந்தியா படமாக தயாராகி கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் உள்ள கார்டெல்லா குரூஸ் என்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார்.

இதனால் ஷாருக் மனம் கலங்கி போனார். தனது வெளிநாட்டு ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் செய்து விட்டு இந்தியா வந்தார். மகன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் மனம் உடைந்து போன ஷாருக் வேறு படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஆர்யன்கான் நிரபராதி என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கான் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.