Latest News
அமித்ஷா வருகையால் கைதான பலூன் வியாபாரி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நேற்றும் இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் அமித்ஷா, மோடி போன்றோர் தமிழ்நாடு வரும்போது அவர்களுக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்டது வரலாறு.
இதை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செய்தன. இந்த நிலையில் இன்று புதுச்சேரி வரும் அமித்ஷா செல்லும் பகுதியில் சென்ற ஒரு கேஸ் பலூன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன் விட்டவர்களுக்கு பலூன் விற்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.
இரு சக்கர வாகனத்தில் பலூன் விற்று வந்த ஜெய்சங்கர் என்ற வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
