Connect with us

தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி

Latest News

தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர்.

கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று சொல்ல முடியாமல் புளுக்கத்தில் தவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் ஓய்வின்றி உழைத்து விட்டு வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் ஒரு மின் விசிறியை வைத்து சரியாக தூங்க முடியவில்லை, குழந்தைகள் படிக்க முடியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இது குறித்து பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய நிலக்கரி வரவில்லை என்றும், 750 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தரவில்லை என்றும் கூறிவந்தார்.

இந்த நிலையில் இன்று பதிலளித்துள்ள செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாளில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சோதனைக் கருவிகள்! எங்கு தெரியுமா?

More in Latest News

To Top