cinema news
தயவுசெய்து அத மட்டும் செஞ்சிறாதீங்க…நான் தப்பு பண்ணிட்டேன்…கதறி அழுத மும்தாஜ்?…
டி.ராஜேந்தரின் “மோனிஷா என் மோனாலிசா” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் நடிகை மும்தாஜ். படத்தின் கதாநாயகியாக நடித்த இவர் படத்தில் கவர்ச்சியை அள்ளித்தெளித்து ரசிகர்ளை கிறங்கடித்திருப்பார்.
அந்த படம் எதிர்பார்த்தது போல அமையாவிட்டாலும் மும்தாஜிற்கு இந்த படம் ஏணியாகவே அமைந்தது. இவரின் கவர்ச்சியான நடிப்பினை காணவே இவர் படங்கள் வெளியாகும் போது தியேட்டரில் இடம் பிடிக்க பாய்ந்து சென்றனர் இவரின் இளம் ரசிகர்கள்.
“குஷி” படத்தில் விஜயுடன் இவர் நடனமாடிய ‘கட்டிப்புடி, கட்டிப்புடி டா’ பாடலை பார்கக மறுத்த கண்கள் கிடையாது அந்த நேரத்தில். “சாக்லேட்” படத்திகல் இவர் நடனமாடிய ‘மலை மலை மருதமலை’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
அப்படி ஒரு அற்புதமான நடனத்தை பாடலுக்காக ஆடியிருப்பார் மும்தாஜ். சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கும் மும்தாஜ், சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
தனது பழைய வாழ்க்கை குறித்து பேசியிருந்த போது சினிமாவிற்காக தான் அணிந்து நடித்த உடைகள் பற்றி கூட நினைத்து வருத்தப்பட்டதாக சொல்லியிருந்தார். அதே போல தனக்கு மரணம் நேர்ந்த பிறகு தனது பழைய கவர்ச்சி படங்களை வைத்து மும்தாஜை அடையாளப்படுத்திவிட வேண்டாம் என கோரியிருக்கிறார்.
தனக்கு சரியான வழி நடத்தல் அமைதிருந்தால் தனது வாழ்க்கை வேறு விதத்தில் பயணித்திருக்க நேர்ந்திருக்கலாம் எனவும் சொல்லியிருக்கிறார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்னும் தனது பழைய படங்கள் மட்டுமே இருப்பது குறித்து அவர் பேசியிருந்தார்.
அதன் காரணமாக அவர் சொல்லியிருப்பது என்னவென்றால் தனது சினிமா கேரியர் குறித்தும், மும்தாஜ் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும் புதிய ரசிகர்கள் தன்னை எளிதாகஅடையாளம் காண மட்டும் தான் எனவும் சொல்லியிருக்கிறார்.