இந்தியாவில் ஊரடங்கால் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிட்டுள்ளது. இதனால் இந்திய அரசும், மாநில அரசும் மக்கள் பயன்பறும் வகையில், பொருளாதார சார்ந்த பிரச்சனைகளை ஈடுக்கட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. குறிப்பாக, வியாபாரிகள், கட்டபணியாளர்கள் ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் தங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டுமே நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை என்றும், சலூன் கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும், கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியமானது என கடுமையான கட்டுப்பாட்டுகளுடன் ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.