இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ஆர் மகன் குறளரசன்

246
Kuralarasan converted to islam religion

டி.ராஜேந்திரனின் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சகோதரர் குறளரசன். சில திரைப்படங்களில் தலை காட்டிய இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார். ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவர்களின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா முன்னிலையில் அவர் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாருங்க:  கிராமத்து இயக்குனரிடம் மறுபடியும் கைகோர்க்கும் லக்‌ஷ்மி நடிகை - புதிய அப்டேட்