cinema news
250 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட விஜய்… படத்தை விட்டு வெளியேறிய தயாரிப்பாளர்.?…
தனது கேரியரின் முக்கியமான நேரத்தில் திடீரென தடாலடி முடிவு ஒன்றினை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் விஜய். தமிழ் சினிமா தயாரிப்பளர்களுக்கு கிடைத்துள்ள் பொக்கிஷமாக கருதப்படுபவர் இவர். இவரது படம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே படம் விற்பனையாகி விடும். அதே போல தியேட்டர் ஓனர்களுக்கும் இவர் அதிர்ஷ்ட லட்சுமி தான்.
விஜயின் நடிப்பில் “கோஸ்ட்” படம் உருவாகி வருகிறது. இந்த படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போ ரிலீஸ், அப்போ ரிலீஸ், எப்போ ரிலீஸ்? என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு புறமிருக்க, படக்குழு ரிலீஸ் செய்ய நினைக்கும் நேரத்தில் மட்டும் தான் படம் வெளியாகும். இப்படி இருக்க ‘விஜய் 69’ படத்தினுடைய அறிவிப்பு எப்பொழுது வேண்டுமாலும் வெளியாகும் என்ற நிலை தான் தொடர்கிறது.
படத்தினுடைய இயக்குனராக ஹச்.வினோத் தான் பணிபுரிவார் என்பது உறுதியாகி
கிட்டத்தட்ட உள்ள நிலையில் இந்த படத்தினுடைய ப்ரொடியூசர் தயாரிப்பாளராக ஆர்.ஆர்.ஆர். படத்தினை தயாரித்த நிறுவனமே விஜயினுடைய அடுத்த படத்தை தயாரிக்க தயாராக இருந்தது.
விஜியிடம் படம் குறித்து பேசும் பொழுது 250 கோடி ரூபாய் படத்திற்கு சம்பளமாக வேண்டும் என விஜய் கேட்டாராம். எப்படியாவது விஜயுடன் பேரம் பேசி தொகையை சிறிதளவு குறைத்துக் கொள்வார் என நினைத்து சென்றிருக்கிறார். ஆனால் விஜயோ தீர்மானமாக அடித்து சொல்லிவிட்டார் தான் கேட்ட தொகை தான் வேண்டும் என.
என்ன செய்வது?, ஏது செய்வது? என யோசித்த தயாரிப்பாளரோ படத்தில் இருந்து சைலன்டாக வெளியேறி விட்டார் என வலைப்பேச்சு அந்தணன் சொல்லியிருக்கிறார். வேறு யார் இந்த படத்தில் இணைவார்கள் என்பது சீக்கிரமாக தெரியத்தான் போகிறது.