இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகர் புரட்சிகர இயக்குனர் என அறியப்பட்டவர். சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதியின் மறுபக்கம், நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் என பல்வேறு படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
சிறுவயதிலேயே தனது மகன் விஜயையும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். நாளைய தீர்ப்பு படத்தை இயக்கினாலும், தன் மகன் விஜய்க்காக , ரசிகன், தேவா, விஷ்ணு முதலிய படங்களை இயக்கினார் இவர்.
தனது மகனின் வளர்ச்சிக்காக விஜயகாந்தை அண்ணன் வேடத்தில் நடிக்க வைத்து செந்தூரபாண்டி என்ற படத்தை இயக்கினார். இப்படி விஜய்யின் வாழ்க்கையில் அவரது முன்னேற்றத்துக்கு வெகுவாக பாடுபட்டார்.
இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவான விஜய் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.இவர் அடிக்கடி வீட்டுக்கு சென்று தாய் தந்தையரை பார்ப்பதில்லை என அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் ஆதங்கத்தில் பேசியுள்ளார்.
என்னதான் பிஸியாக இருந்தாலும் தாய் தந்தையரை மாதத்திற்கு ஒருமுறையாவது பார்த்தால் நன்றாக இருக்கும் என இவர் கூறியுள்ளார்.
https://twitter.com/spicychilli4u/status/1522232848928944136?s=20&t=_-QtXb45ZVHPsvjZz6L4pg