Latest News
தாத்தாவா…தளபதியா?…வியூஸ் யாருக்கு அதிகம்…
விஜய் நடித்து வரும் “கோட்” படத்தின் ஷாட்ஸ் வீடியோ விஜயின் பிறந்த தினத்தன்று வெளியிடப்பட்டது. விஜய் டபுள் ஆச்சனில் வருகிறார் வீடியோவில்.
ஓரே பைக்கில் இருவரும் வந்து கொண்டிருக்க திடீரென பின்னால் அமர்ந்திருக்கும் விஜய் துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார். ‘ஹாப்பி பர்த் டே’ என்ற குறியீடுடன் வெளிவந்தது விஜயின் வீடியோ.
நேற்று மாலை “இந்தியன் – 2” வின் டிரையலர் வெளியானது, சித்தார்த் வந்து வசனமெல்லாம் பேசி கொஞ்ச நேரத்தில் கமல் வருவார்.
டயலாக்குகள் ஒவ்வொன்றும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டி விட தான் செய்கிறது. டிரையலர் வெளியான பிறகு அதிக நிம்மதியில் இருப்பது அனிரூத்தாகத்தான் இருக்கும்.
‘தாத்தா வராரு’ பாடல் அதிகமாக ட்ரால் ஆனது. இப்படி ஒரு டியூனை எப்படி ஷங்கர் அனுமதிச்சாருன்னு எல்லாம் கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சது. டிரையலர்லயே ஏகப்பட்ட டுவிஸ்ட் வைத்திருக்கார் ஷங்கர்.
மறைந்த மனோ பாலா, விவேக், மனோரமால்லாம் படத்தில் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி தான். சொல்லப்போனால் டிரையலர் வந்த பிறகு கமல் ஷங்கரை பிடிக்காதவர்கள் கூட செம்ம மெசேஜ் சொல்லப்போறாங்க போலயேன்னு நினைக்கின்ற படி தான் இருக்கிறது.
வெளியாகி இருபது மணி நேரத்தில் ஆறு மில்லியன் வியூஸ் கிடைத்திருக்கிறது “இந்தியன் – 2″க்கு. இன்னும் ஸ்பீட் எடுக்கும் என எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.அதே நேரத்தில் விஜய் ஷாட்ஸ் வீடியோ ஒன்பதரை மில்லியன் வியூஸை தாண்டி விட்டாதாம்.
தளபதி, தாத்தாவை விட செம்ம ஸ்பீடுன்னு நினைக்க வைக்குதா. அது தான் இல்லையாம் நாலு நாள்ல ஒன்பதரை மில்லியன் தளபதிக்கு, வெறும் இருபது மணி நேரம் தான் ஆறரை மில்லியனுக்கு. இது தான் வித்தியாசமாம். அதே மாதிரி “இந்தியன் – 2” டிரையலர், ஆனா விஜய் வீடியோ ஷார்ட்ஸ் மட்டுமே தான்.