அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- எஸ்.விசேகர்

11

நேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று  சென்னை அடையாறு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நடிகரும், பாஜ கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்தவொரு விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை முன்வைக்க வேண்டாம் என்றிருக்கிறோம். எந்தவொரு அரசும் ஆட்சிக்கு வந்தவுடனேயே தங்களது செயல்பாடுகளை ஆரம்பிப்பார்கள்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அரசு, தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது இதுபோன்ற நேரத்தில் தொற்றுநோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்த முடியும்.

இதனால், ஒரே நேரத்தில் எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த முடியாது. கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு பற்றி காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்துக்கொண்டு இருந்தால், அது வெற்று அரசியலாகத்தான் இருக்கும் சரியாக இருக்காது என்றார்.

பாருங்க:  கோவிலைக் காட்டிலும் மருத்துவமனைக்கு செலவு செய்யுங்க! ஜோதிகாவை டார்கெட் செய்யும் எஸ் வி சேகர்!
Previous articleஅரண்மனை 3 படத்தின் புதிய ஸ்டில்கள்
Next articleசார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனம்