cinema news
ரஜினி இல்லேன்னா என்ன அதான் விஜய் இருக்காரே!…சர்ப்ரைஸ் கொடுக்க போகும் சிவகார்த்திகேயன்?…
“கில்லி” படம் ரீ-ரிலீஸ் ஆனாலும் ஆச்சு அந்த படத்தை பற்றி டெய்லி தகவல்கள் ஒன்னு ஒண்ணா கிணறு வெட்ட பூதம் கிளம்பிய மாதிரி வந்துக்கிட்டே தான் இருக்குது. இப்படி இருக்கிற இந்த நேரத்துல சிவகார்த்திகேயனுடைய அடுத்த படம் வெங்கட் பிரபு கூட தான்கிறது கிட்டதட்ட முடிவாகிடுச்சு.
படத்துடைய சூட்டிங்கை இந்த வருஷ கடைசி டிசம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டம் போட்டிருக்காங்க. அந்த படத்துல முதல் ஆளா யுவன் சங்கர் ராஜாவஅதிகாரப்பூர்வமா கமிட்பண்ணிட்டாங்க.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ்க்கு கூட சிவகார்த்திகேயன் படம் பண்றாரு. இப்போ இன்னைக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியான தகவல்னு சொல்றதை விட மிகப் பெரிய அப்டேட்ன்னு சொல்லலாம். யாருக்கும் தெரியாம இருந்த ஒரு ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன்.”கோட்” படத்தை பற்றிய ரொம்ப முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்காரு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் “கோட்”ல், கேமியோ ரோல் பண்ணி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட அவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் எல்லாமே சென்னையில வச்சி எடுக்கப்பட்டு விட்டதாம்.
ஒருவேளை இந்தப் படத்துல சிவகார்த்திகேயன் பண்ணப்போற ரோலோட கன்ட்யுனிட்டி தான் வெங்கட் பிரபு கூட அவர் நடிக்க போற அடுத்த படத்துல இருக்குமானு ரசிகர்களை குழப்பி விடுற மாதிரி தான் இந்த செய்தியை சொல்லி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.
ரஜினிகூட நடிக்கனும்ங்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கும் எப்பவுமே உண்டாம். அதனால் இப்பொ என்ன அந்த சான்ஸ் வரும் போது வரட்டும். அவர் விஜய் கூட நடிக்கிறது மிகப்பெரிய பலம் தான் அவரோட கேரியருக்கு.