Connect with us

கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது

cinema news

கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது

சமீபத்தில் வந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு முதல் நாள் ஏப்ரல் 13ம் தேதி வெளியான திரைப்படம். விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படம் பெரிய ஹிட்டும் அல்ல, பெரிய தோல்வியும் அல்ல, சுமாரான படமாக வந்து போனது.

இந்த படத்தின்  விஜய் நடித்திருக்கும் ஒரு காட்சி கடுமையாக கிண்டல் செய்யப்படுகிறது. கொஞ்சம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்படுகிறது.

ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய விமானப்படை பைலட் சிவராமன் சஜன் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு ஒரு டுவிட் இட்டிருந்தார். அதுதான்  இந்த கிண்டலுக்கு காரணம் அவர் குறிப்பிட்டது என்னவென்றால்

‘பீஸ்ட்’ படத்தின் இறுதிக்காட்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட்டுள்ள அவர், ‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ என்று கூறியுள்ளார் அவரது இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள  மற்றொரு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி “என்ன இது? என் மூளை உணர்விழந்துவிட்டது. என்னால் முன்னோக்கி சிந்திக்கவே முடியவில்லை. எல்லா லாஜிக்கும் வடிந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

இதுதான் சரியான தருணம் என விஜய்யின் ஹேட்டர்ஸ்கள் களத்தில் குதித்து விஜய்யோட பீஸ்ட் படத்தை ஒரு வழியாக்கி விட்டனர்.

More in cinema news

To Top