Entertainment
மோசடி வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி கோர்ட்டில் ஆஜர்
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாகக் களமிறங்கினர்.
இந்த நிலையில் பல நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கர்நாடகா அருகே நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.