Connect with us

Tamil Flash News

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடிவந்த நிலையில், அவர் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் 6 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகவின் ஹசன் பகுதியில் அருகே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாருங்க:  மூன்று வேடம்.. சயின்ஸ் பிக்‌ஷன்.. சந்தானத்தின் புதிய பட அப்டேட்

Tamil Flash News

லதா மங்கேஷ்கர் குணமாக அவரது ரசிகர் செய்த காரியம்

லதா மங்கேஷ்கர் விரைவில் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இனிமையான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லதா மங்கேஷ்கருக்கு 92 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் குணமடைய வேண்டும் என்று தனது ஆட்டோ முழுவதும் அவரது புகைப்படத்தை ஒட்டி பிரார்த்தனை செய்யும் மும்பையை சேர்ந்த சத்யவான் என்பவர்.

மேலும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்பான செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையுடன் இருப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு
Continue Reading

Entertainment

32 ஆண்டுகளாக குற்றம் செய்த இருவரை இன்று வரை தீவிரமாக தேடி வரும் போலீஸ்

கோவையைச் சேர்ந்த சீனியப்பன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்26-ம் தேதி தனது  வியாபாரத்தை முடித்துக் புறப்படுகையில் ரூ.35 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.வாகனத்தில் தனது பணத்தை வைத்து ஸ்வாமி கும்பிட்டு கொண்டிருக்கையில்

அப்போது அவரது வாகனத்தை திருட இருவர் முயன்றனர். இதை தடுக்க முயன்ற சீனியப்பனை, அந்நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பணத்துடன், இருசக்கர வாகனத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.

சீனியப்பனுக்கு தோளில் காயம் ஏற்பட்ட நிலையில் புகாரின் பேரில் கடைவீதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, இலங்கையின் மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த லீமா என்ற மகேந்திரன் (அப்போதைய வயது 25), கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற ஆனந்தராஜ் (அப்போதைய வயது28) ஆகியோரை கைது செய்தனர்.

இருவர் மீதும் கடந்த 25.06.1991-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த28.07.1992-ல் ஜாமீனில்  சென்ற இருவரும், அதன் பின்னர் ஆஜராகவில்லை. இவர்களுக்கு ஜாமீன் உறுதி அளித்தவர்களும், போலி முகவரியை அளித்து உள்ளனர்.

எனவே, இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இது தற்போது வரை நிலுவையில் உள்ளது. இருவரது விவரம் தெரிந்தவர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாருங்க:  பொங்கல் பை சிறப்பு தொகுப்பு ஜனவரி 31 வரை விநியோகம்
Continue Reading

Latest News

வரும் வாரங்களில் ஊரடங்கு இருக்குமா?

கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஞாயிற்றுகிழமையாதலால் கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது.

எனினும் வரும் வாரங்களில் கொரோனா பரவி வருவதை பொறுத்து ஊரடங்கு குறைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  மே 29 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Continue Reading

Trending