கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறைக்கு சென்ற பேராசிரியர் சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின் ஒவ்வொரு முறை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த போதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சில செய்கைகளை செய்தார். சாமிவந்தது போல் அருள் வாக்கு கூறினார். திடீரென கீழே அமர்ந்து தியானம் செய்தார். அதன்பின் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக எப்போதும் காரில் வரும் அவர் திடீரென நேற்று ஸ்கூட்டரில் வந்தார். தலையில் ஹெல்மெட் அணிந்து அவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.