cinema news
இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் இன்று. ரஹ்மான் 92ல் வந்த ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்பே இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசிப்பவராக இருந்தவர்.
ரோஜா படம் இவருக்கு பல்வேறு கெளரவத்தை கொடுத்ததால் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு வந்தது.
இறுதியில் இந்தியாவில் யாருமே எட்டாத பெரிய உயரமான உலக அளவிலான ஆஸ்கார் விருதையும் இவர் வென்றார்.
இன்றும் பல படங்களில் பிஸியாக இவர் இசையமைத்து வருகிறார்.