பேனர்களை முதலில் அகற்றுங்கள்… காத்திருந்த அமைச்சர்கள்… அரசு விழாவில் அதிரடி

பேனர்களை முதலில் அகற்றுங்கள்… காத்திருந்த அமைச்சர்கள்… அரசு விழாவில் அதிரடி

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது.

இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து அதிமுக, திமுக, அமமுக, விடுதலை சிறுத்தை என பல்வேறு கட்சி தலைவர்கள் இனிமேல் சாலைகளில் பேனர்களை வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் புதிதாக கூட்டுறவு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர். எனவே, அவர்களை வரவேற்க சாலை நெடுகிலும் ஏராளமான பேனர்களை கட்சியினர் வைத்திருந்தனர்.

இதைக்கண்டு கோபமடைந்த அமைச்சர்கள் பேனர்களை வைக்கக்கூடாது என தலைமை கூறிய பின்பும் எதற்காக பேனர்களை வைத்துள்ளீர்கள். முதலில் அதை அகற்றுங்கள். அப்போதே நாங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் எனக்கூறி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகே அமர்ந்துவிட்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் அகற்றுகிறோம் என நிர்வாகிகள் கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. எனவே, அந்த பேனர்களை நிர்வாகிகள் அகற்றினர். அதன்பின்னரே அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.