Entertainment
கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞர் படுகொலை
கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் நீதிமன்றத்திலிருந்து காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் ராஜசேகரை துப்பாக்கியால் சுட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜசேகரின் கழுத்தில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
