cinema news
போஸ்டர் ஒட்டி கலக்கும் மோகன் ரசிகர்கள்
1980 முதல் 91 வரை நிற்க கூட நேரமில்லாமல் பரபரப்பாக படம் செய்தவர்தான் மோகன்.
எல்லா வெள்ளிக்கிழமையும் இவரது படம் ரிலீஸ் ஆகி விடும் அதிக பட்சம் அந்த படங்கள் ஹிட்டும் அடித்து விடும்.
மோகனுக்கு அதிக அளவு பெண் ரசிகைகளும் இருந்தார்கள். மிக செல்வாக்கு மிக்க அதிகாரம் மிக்க ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த மோகனின் மார்க்கெட் 80களின் இறுதியில் ஆட்டம் கண்டது.
91ல் மோகன் நடித்த உருவம் படத்துக்குபின் படம் நடிக்காமல் இருந்த மோகன் 8 வருட இடைவேளைக்கு பிறகு அன்புள்ள காதலுக்கு படத்தில் நடித்தார் அதற்கு பின் சுட்ட பழம் படத்தில் நடித்தார் ஆனால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இந்த நேரத்தில்தான் மோகன் நடிக்கும் புதிய படம் ஹரா உருவாகி வருகிறது.
மோகன் நடித்து பல வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் மோகனுக்கு என இன்னும் வெறித்தனமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
மோகன் தற்போது ஹரா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை எதிர்பார்த்து சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களே இதற்கு சான்று.