Entertainment
விஜய் ரசிகர்கள் உடைத்த இருக்கையை சீரமைத்த நிர்வாகம்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது.
விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்தவே முடியாது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தியேட்டரில் இலவசமாக காண்பிக்கப்படும் என்று நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அறிவித்ததால் ரசிகர்கள் வந்து குவிந்து விட்டனர்.
இவர்கள் டிரெய்லரை பார்த்ததோடு மட்டுமல்லாமல் இருக்கைகளை அடித்து உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தற்போது இருக்கைகளை சீரமைத்துள்ளதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
#RamCinemas 🔥 https://t.co/er83mbCucC
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 6, 2022
