Connect with us

முதன் முதலில் மோகனுக்கு ஜோடியாக நடிக்கும் குஷ்பு

Entertainment

முதன் முதலில் மோகனுக்கு ஜோடியாக நடிக்கும் குஷ்பு

எண்பதுகளில் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்தவர் நடிகர் மோகன். 80களின் இறுதிகாலமான 89ம் ஆண்டு வரை ரொம்ப பிஸியாக இருந்தார் இவர். 89களில் இருந்து மோகன் அதிக தோல்விப்படங்களை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவில் இருந்து விலகினார்.

அதன் பின்பு அவ்வப்போது மோகன் தமிழில் படம் நடித்தாலும் அந்த பவர்ஃபுல்லான 80களின் காலம் அமையவில்லை. அவரின் படங்கள் எதுவும் 90களுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

இந்த நிலையில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் மோகன் நடிக்கிறார்.

இப்படத்தில் முதன் முறையாக குஷ்பு, மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். குஷ்பு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிஸியான காலத்தில் மோகன் தமிழ் சினிமாவை விட்டு விலகி சென்ற காலம் வந்தது.

அதனால் அப்போதைய முன்னணி நாயகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்த குஷ்பு மோகனுக்கு மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மோகனுடன் இணைந்து  நடிக்கிறார் குஷ்பு.

பாருங்க:  ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

More in Entertainment

To Top