Entertainment
முஸ்லீம்கள் தீவிரவாதி என உருவகப்படுத்த இவர்களே காரணம்- யூ டியூபர் மாரிதாஸ்
பிரபல யூ டியூபர் மாரிதாஸ் இவர் தினமும் மாலை 7.30 அளவில் ஆளும் கட்சியை எதிர்த்தோ இல்லை மற்ற கட்சிகளின் குறைகளையோ ஊழல்களையோ சொல்லும் விதமாக தினமும் வீடியோ போடுவார்.
ஒரு கட்டத்தில் திமுகவின் ஊழல்களை இவர் தொடர்ந்து தோலுரித்தால் அதனால் இவர் மீது பழைய வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மாரிதாஸ் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.
இருப்பினும் மாலை 7 மணி ஆகிவிட்டால் யாரையாவது விமர்சித்து வீடியோவை வெளியிட்டு விடுகிறார்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சினிமாக்கள் காட்டி இருப்பது கூறி இருப்பதாவது,
இந்திய அளவில் தீவிரவாத தாக்குதல் பற்றி புள்ளி விவரங்களை நீங்கள் ஆய்வு செய்தால் அது சொல்லும் உண்மை நக்சல் மாவோஸ்ட் போன்ற கம்யூனிச தீவிரவாத தாக்குதல் தான் அதிகம். ஆனால் தீவிரவாதி என்றாலே மக்கள் பொதுப் புத்தியில் இஸ்லாமியர் என ஆழமான எண்ணம் உருவாக மீடியாவும் சினிமாவும் தான் காரணம் என மாரிதாஸ் கூறியுள்ளார்.
