83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எங்கள் இளம், நம்பிக்கைக்குரிய டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் இதயத்தை உடைக்கும் மற்றும் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி. அவர் ஒரு லெஜண்ட்-மேக்கிங், அவர் மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.