சமீபத்தில் தஞ்சையில் உள்ள கிறித்தவ பள்ளி ஒன்றில் மதம் மாற கட்டாயப்படுத்தியதால் லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை பாரதிய ஜனதாவினரும் மற்றும் காவி கட்சிகள் அனைத்தும் இந்த தற்கொலையை கண்டித்து லாவண்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், கல்வி அமைச்சர் பொய்யாமொழியோ முதல்வர் ஸ்டாலினோ, தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி பிரியாவோ எல்லாருமே மதம் மாற சொன்னதால் அந்த பெண் இறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள யூ டியூபர் மாரிதாஸ், திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தன் பெயரை பொய்யாமொழி பதில் “பொய்மொழி” என்று மாற்றிக்கொள்ளவும் என கூறியுள்ளார்.