cinema news
மாரிதாசுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி
எழுத்தாளர் மாரிதாஸ் என்பவர் தொடர்ந்து பிஜேபிக்கு ஆதரவாகவும் , திமுகவுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருபவர். சமீபத்தில் நடிகர் சித்தார்த் பிஜேபிக்கு எதிராகவும் உபி முதல்வர் யோகிக்கு எதிராகவும் பேசியது சர்ச்சையானது.
தொடர்ந்து பிஜேபியின் ஆட்சி அவலத்தை டுவிட் மூலம் தினசரி வெளிப்படுத்தியதில் பிஜேபி தொண்டர்கள் சித்தார்த் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் திமுகவை கீழ்க்கண்டவாறு கடுமையாக சாடியுள்ளார் மாரிதாஸ், அவர் சொன்னது இதுதான்.
டேய் விடியல் எங்கடா? டேய் பெட் எங்கடா? டேய் பிணம் எரிக்க இடம் எங்கடா? டேய் கூத்தாடி சித்தார்த். உன்ன தாண்டா டேய். மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது திமுக விடியல் அரசு. இப்போ வாயை திறடா சித்தார்த். வாய்க் கொழுப்பு பேசி திரிந்த! இப்போ பேசு டேய்..
இதை நடிகை கஸ்தூரி வன்மையாக கண்டித்துள்ளார் . கஸ்தூரி கூறியது இதுதான்
https://temple.dinamalar.com/news_detail.php?id=112724
எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். Why are you demeaning
@Actor_Siddharth
profession here? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ?
Do BJP’s army of actors agree with this attack?
@BJP4India
சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த்தின் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி கங்கனா,குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு?
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.